சென்னை : அரும்பாக்கம், சித்த மருத்துவமனை சார்பில், செம்பாக்கம், சீயோன் பள்ளியில், நேற்று முன்தினம், கொரோனா விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சென்னை, செம்பாக்கம்,சீயோன் பள்ளியில், மத்தியஆயுஷ் அமைச்சக உத்தரவுப்படி, அரும்பாக்கம், சித்த மருத்துவமனையின் டாக்டர்கள் குழுவினர்,நேற்று முன்தினம் முகாமிட்டு, கொரோனா பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இதில், முக கவசம் அணிவது, பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, எடுத்துக் கொள்ள வேண்டியஉணவுகள் குறித்து, பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இதில், பள்ளியின் தலைவர் முனைவர் விஜயன், துணை தலைவர் ஆல்டஸ் ஹக்ஸ்லி மற்றும் சித்த மருத்துவமனை டாக்டர்கள் இணைந்து, இலவசமாக மக்களுக்கு கபசுர குடிநீர் பொடியை வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE