சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொந்த ஊர் அனுப்பக் கோரி வட மாநிலத்தவர் ஆர்ப்பாட்டம்

Added : மே 24, 2020
Share
Advertisement
பம்மல் : பம்மல், நாகல்கேணியில், பீஹார் மாநில தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பக் கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பம்மல், நாகல்கேணியில், தோல் தொழிற் சாலைகள் இயங்குகின்றன. அவற்றில், ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கட்டட பணிகளிலும், பலர் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள், தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பக்கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த, 18ல்,

பம்மல் : பம்மல், நாகல்கேணியில், பீஹார் மாநில தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பக் கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பம்மல், நாகல்கேணியில், தோல் தொழிற் சாலைகள் இயங்குகின்றன. அவற்றில், ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கட்டட பணிகளிலும், பலர் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள், தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பக்கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த, 18ல், 500க்கும் மேற்பட்ட, வட மாநில தொழிலாளர்கள், நாகல்கேணி - திருநீர்மலை சாலையில், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது, நடவடிக்கை எடுப்பதாக, போலீசார் கூறியதை அடுத்து, கலைந்து சென்றனர்.

இந்நிலையில், நேற்று காலை, 300க்கும் மேற்பட்ட, பீஹார் மாநில தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு அனுப்பக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சங்கர் நகர் போலீசார், பேச்சு நடத்தி, 'டோக்கன்' முறையில், ஓரிரு நாட்களில், சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X