சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியிடம் அத்துமீறல்; வாலிபருக்கு, 'போக்சோ'

Added : மே 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருவொற்றியூர் : மாணவியிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவொற்றியூரைச் சேர்ந்த, 10ம் வகுப்பு படிக்கும், 15 வயது மாணவி, இரு தினங்களுக்கு முன், காணாமல் போனார். இது குறித்து, பெற்றோர், திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.வீட்டின்வெளியில் நின்ற, இருசக்கர வாகனம், 70 ஆயிரம் ரூபாய் மற்றும் மொபைலையும், மாணவி எடுத்துச் சென்றதாக தெரிகிறது.இது குறித்து விசாரித்த, ஆய்வாளர் சுகுணா தலைமையிலான போலீசார், பாலவாக்கத்தில் உறவினரான கபிலன், 20, என்பவருடன் தங்கியிருந்த மாணவியை மீட்டனர்.

விசாரணையில், மாணவியை கபிலன், மூன்று ஆண்டுகளாக காதலித்துள்ளார். சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக, ஆசை வார்த்தை கூறி, இரு சக்கர வாகனம், பணம், மொபைலுடன், அழைத்து சென்றுள்ளார்.மேலும், பாலவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்து, மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.கபிலனை, போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-மே-202005:09:24 IST Report Abuse
Mani . V ".......வீட்டின் வெளியில் நின்ற, இருசக்கர வாகனம், 70 ஆயிரம் ரூபாய் மற்றும் மொபைலையும், மாணவி எடுத்துச் சென்றதாக தெரிகிறது......" இதில் கபிலன் மட்டுமே குற்றவாளி என்று எப்படி சொல்வது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X