பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஆர்.எம்., மாணவர் நவீன முக கவசம் தயாரிப்பு

Added : மே 24, 2020
Share
Advertisement
 எஸ்.ஆர்.எம்., மாணவர்  நவீன முக கவசம் தயாரிப்பு

தாம்பரம் : எஸ்.ஆர்.எம்., பல்கலைமாணவர்கள், புது வடிவ முக கவசம் தயாரித்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க, அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய, அரசு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், புதிய ரக முக கவசத்தை, ஆந்திராவில் உள்ள, எஸ்.ஆர்.எம்.,- கல் லூரியில், இரண்டாம் ஆண்டு, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பயிலும், மோகன் ஆதித்யா என்ற மாணவர் கண்டுபிடித்துள்ளார்.

இந்த முக கவசத்திற்கு, 'பேஷ் ஷீல்ட் 2.0' எனப் பெயரிடப்பட்டு உள்ளது. இந்த முக கவசம், அட்டை மற்றும் பிளாஸ்டிக் கொண்டு, மக்கும் தன்மையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.இது, மிகவும் இலகுரகமாகவும், எளிமையாகவும் உள்ளதால், ஒரு நபரின் முழு முகத்தையும் மூடுகிறது. இதனால், சம்பந்தப்பட்ட நபர், தொற்று பாதிப்புக்கு ஆளாகாமல், பாதுகாத்துக் கொள்ள முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X