சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கதவை, 'ஆட்டை' போட்ட திருடர்கள்

Added : மே 24, 2020
Share
Advertisement
பல்லாவரம் : ஜமீன் பல்லாவரம், வேம்புலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன், 33. அப்பகுதியில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கொரோனா காரணமாக கடைகள் மூடப்பட்டதால், வீட்டை பூட்டி, மனைவி, குழந்தையுடன், பம்மலில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஆனந்தன் வீட்டு பின்பக்க கதடை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள்,

பல்லாவரம் : ஜமீன் பல்லாவரம், வேம்புலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன், 33. அப்பகுதியில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், கொரோனா காரணமாக கடைகள் மூடப்பட்டதால், வீட்டை பூட்டி, மனைவி, குழந்தையுடன், பம்மலில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஆனந்தன் வீட்டு பின்பக்க கதடை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், பாத்திரங்கள், குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடி சென்றனர். போகும் போது, கதவையும் துாக்கி சென்றுவிட்டனர்.

நேற்று காலை, ஆனந்தன் வீடு திறந்திருப்பதை பார்த்து, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தகவல் தெரிவித்தனர். பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X