கொரோனாவுக்கு இரண்டு பெண்கள் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு இரண்டு பெண்கள் பலி

Added : மே 24, 2020
Share
சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்ட, பெண்கள் இருவர் உயிரிழந்தார்.ராயப்பேட்டையைச் சேர்ந்த, 58 வயது பெண், கடந்த, 20ல் கொரோனா சிகிச்சைக்காக, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.நேற்று முன்தினம் இரவு, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல், பீட்டர்ஸ் சாலையில் உள்ள மயானபூமியில் அடக்கம் செய்யப்பட வுள்ளது.தேனாம்பேட்டை மண்டலத்தில், கொரோனாவால்

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்ட, பெண்கள் இருவர் உயிரிழந்தார்.

ராயப்பேட்டையைச் சேர்ந்த, 58 வயது பெண், கடந்த, 20ல் கொரோனா சிகிச்சைக்காக, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.நேற்று முன்தினம் இரவு, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல், பீட்டர்ஸ் சாலையில் உள்ள மயானபூமியில் அடக்கம் செய்யப்பட வுள்ளது.தேனாம்பேட்டை மண்டலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1,000த்தை எட்டியுள்ளது.

அதேபோல், புதுப்பேட்டையைச் சேர்ந்த, 53 வயது பெண்ணுக்கு, கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, 2ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடல் ராயப்பேட்டையில் உள்ள மயான பூமியில், நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.இறந்த பெண்ணுக்கு சிறுநீரக கோளாறு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X