தன்னார்வலர்களுடன் காவல் துறை ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தன்னார்வலர்களுடன் காவல் துறை ஆலோசனை

Added : மே 24, 2020
Share
 தன்னார்வலர்களுடன் காவல் துறை ஆலோசனை

மயிலாப்பூர் : காவல் துறை சார்பில், கொரோனா பணியில் உள்ள, தன்னார்வலர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தப்பட்டது.

கொரோனா தடுப்பு, சேவை பணியில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்களுக்கு, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி காவல் துறை மாவட்ட துணை ஆணையர்கள் தலைமையில், மயிலாப்பூர், பாரதிய வித்யாபவன் அரங்கில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், மயிலாப்பூர், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

கொரோனா பரவல் தடுப்பு பணி, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில், எதிர்கொண்ட பிரச்னைகள், அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுகாதார நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. நிகழ்ச்சியில், மயிலாப்பூர் துணை கமிஷனர், தேஷ்முக் சேகர் சஞ்சய் பேசியதாவது:

கொரோனா பரவலை தடுக்க, நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பொருட்கள் வாங்க செல்லும் மக்கள், வியாபாரிகளிடையே, சமூக இடைவெளி கடைப்பிடிக்க அறிவுறுத்துவதுடன், பத்திரிகை, ஊடகங்கள் வாயிலாக, தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்

திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தர்மராஜன் பேசியதாவது:சென்னையில் அனைத்து பகுதிகளிலும் சென்று பணியாற்றுங்கள். குடிசைப்பகுதி மக்களிடம், அவர்களின் ஆழ்மனதில் பதியும்படி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். மேலும், களை, மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், தனியார் தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள், தன்னார்வலர்கள், மக்கள் நலச்சங்க நிர்வாகிகள், மற்றும் மயிலாப்பூர், கோட்டூர்புரம், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை உதவி கமிஷனர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X