ரூ.4 லட்சம் மதிப்பிலான போலி கிருமி நாசினி பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.4 லட்சம் மதிப்பிலான போலி கிருமி நாசினி பறிமுதல்

Added : மே 24, 2020
Share

செங்குன்றம் : பிரபலமான நிறுவனங்களின் தயாரிப்பு போல், போலியாக தயாரிக்கப்பட்ட, கிருமிநாசினி உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்கள் சிக்கின.

சென்னையின் பல பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில், பிரபலமான நிறுவனங்களின், கிருமி நாசினி உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப்பொருட்களை போன்று, போலியாக தயாரிக்கப்பட்ட பொருட்கள், விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இது குறித்து, சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு அதிகாரிகள், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில், அதிரடி சோதனை செய்தனர்.அங்கிருந்த பிரபலமான நிறுவனங்களின் தயாரிப்பை போன்ற, போலி வீட்டு உபயோகப்பொருட்களின் மாதிரிகள் சிக்கின.

இதையடுத்து, தீவிர விசாரணை நடந்தது. அதில், சென்னை செங்குன்றம் அடுத்த, வடபெரும்பாக்கத்தில் உள்ள குடோனில், போலி பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.அங்கிருந்த, 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போலி கிருமி நாசினி, வீட்டு உபயோகப்பொருட்களை, போலீசார் கைப்பற்றினர்.

இது தொடர்பாக, குஜராத் மாநிலத்தை சேர்ந்த துளசிநாத் சிங், 25, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் ராணா, 29, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், குஜராத்தைச் சேர்ந்த ரமேஷ் படேல் என்பவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X