பொது செய்தி

தமிழ்நாடு

காமராஜர் சாலையில் கடைகள் மூடல்

Added : மே 24, 2020
Share
Advertisement

அடையாறு : கொரோனா பரவலை தடுக்க, காமராஜர் சாலையில் உள்ள கடைகள், நேற்று முதல் மூடப்பட்டன.

அடையாறு மண்டலம், 173வது வார்டு, கிரீன்வேஸ் சாலையில், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் நீதிபதி குடியிருப்புகள் உள்ளன. இந்த வார்டில், 82 பேருக்கு கொரோனா பாதித்தது. மண்டலத்தில், இந்த வார்டில் தான் பாதிப்பு அதிகம்.

குறிப்பாக, குடிசை பகுதியான, கே.வி.பி., கார்டன், ராஜா கிராமணி தோட்டம் ஆகிய இடங்களில் தான், அதிகமான பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இந்த குடிசை பகுதியின் அருகில், காமராஜர் சாலை உள்ளது.இங்கு, ௧ கி.மீ.,யில், நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பெரும்பாலான கடைகள், நெருக்கமாக உள்ளன. இங்கு, சமூக இடைவெளி கடைபிடிக்காமல், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இங்கிருந்து கொரோனா பரவ வாய்ப்புள்ளதால், கடைகளை மூட, மாநகராட்சி முடிவு செய்தது.இது குறித்து, அதிகாரிகள், வியாபாரிகளிடம் பேசினர். கடைகளை மூட, வியாபாரிகள் சம்மதித்தனர். இதையடுத்து, மளிகை, காய்கறி, மருந்து கடைகளை தவிர, இதர கடைகள், நேற்று மூடப்பட்டன. வரும், 31 வரை கடைகளை மூட, அதிகாரிகள் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X