மீன்களில் பிளீச்சிங் பவுடர் கொட்டியதால் அதிகாரியை முற்றுகையிட்ட மீனவர்கள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீன்களில் பிளீச்சிங் பவுடர் கொட்டியதால் அதிகாரியை முற்றுகையிட்ட மீனவர்கள்

Added : மே 24, 2020
Share
எண்ணுார் : விற்பனைக்கு வைத்திருந்த மீன்களில், பிளிச்சிங் பவுடர் கொட்டிய அதிகாரியை, மீனவர்கள் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. எர்ணாவூர், ராமகிருஷ்ணா நகர் கடற்கரையில், பாரதியார் நகர், காசி விசாலாட்சி குப்பம், நேதாஜி நகர் உள்ளிட்ட பல மீனவ கிராமங்களைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர், கடலில் மீன்பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.ஊரடங்கு காலத்தில், மீனவர்கள், மீன்
 மீன்களில் பிளீச்சிங் பவுடர் கொட்டியதால் அதிகாரியை முற்றுகையிட்ட மீனவர்கள்

எண்ணுார் : விற்பனைக்கு வைத்திருந்த மீன்களில், பிளிச்சிங் பவுடர் கொட்டிய அதிகாரியை, மீனவர்கள் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

எர்ணாவூர், ராமகிருஷ்ணா நகர் கடற்கரையில், பாரதியார் நகர், காசி விசாலாட்சி குப்பம், நேதாஜி நகர் உள்ளிட்ட பல மீனவ கிராமங்களைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர், கடலில் மீன்பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.ஊரடங்கு காலத்தில், மீனவர்கள், மீன் வாங்க வந்தவர்கள் என, கூட்டமாக நின்றதாக கூறி, விற்பனைக்கு வைத்திருந்த, பட்டம்மா, 65, என்பவரின், 1,௦௦௦ ரூபாய் மதிப்புள்ள மீன்களில், பறக்கும் படை அதிகாரிகள், பிளீச்சிங் பவுடரை கொட்டியுள்ளனர்.

மீன் விற்றுக் கொண்டிருந்த மூதாட்டிகள் மீதும், பிளீச்சிங் பவுடரை கொட்டியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த மீனவர்கள், 100க்கும் மேற்பட்டோர், அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த எண்ணுார் காவல் உதவி ஆணையர் உக்கிரபாண்டியன், இரு தரப்பினரிடமும் பேசி, சமரசம் செய்தனர்.பறக்கும் படை அதிகாரி முருகபாலாஜி, நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து, முற்றுகை கைவிடப்பட்டது.

இந்த சம்பவத்தால், பரபரப்பு ஏற்பட்டது.ராமகிருஷ்ணா நகர் கடற்கரையில் தொழில் செய்யும் மீனவர்களின் எண்ணிக்கையை கோரிய, மண்டல உதவி ஆணையர் பால் தங்கதுரை, தனிமனித விலகலுடன் மீன் விற்க இடம் ஏற்பாடு செய்யப்படும் என, கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X