புதுடில்லி: மக்களுக்கு நீதி கிடைப்பது, எக்காலத்திலும் தடைபடக்கூடாது என்பதற்காக, நீதிமன்றங்களை, டிஜிட்டல்' மயமாக்கவும், சில முக்கிய சீர்திருத்தங்களை கொண்டுவரவும், உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
கொரோனா' தடுப்ப நடவடிக்கையாக, நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில், நீதிமன்றங்கள் வழக்குகளை விசாரிக்க முடியாமல், முற்றிலுமாக முடங்கியது. அடுத்த சில நாட்களில், வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, வழக்கு விசாரணை துவங்கியது. முதல்கட்டமாக, உச்ச நீதிமன்றம், இரு அமர்வுகள் வாயிலாக, வழக்குகளை விசாரித்தன. ஒரு நாளில், 10 முதல் 15 வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

தற்போது, ஆன்லைன்' அமர்வுகளின் எண்ணிக்கையை, உச்ச நீதிமன்றம், பத்தாக உயர்த்தியுள்ளது. இதனால், விசாரிக்கப்படும் வழக்கு எண்ணிக்கையும் அதிகரித்தன. இந்நிலையில், ஆன்லைன்' வாயிலாக வழக்குகளை பதிவு செய்து, வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விசாரணை நடத்துவதை ஊக்குவிக்க, உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், நீதிமன்றத்தில், மக்கள் நடமாட்டம் கட்டுக்குள் வரும் என, கருதப்படுகிறது.
எனவே, நீதிமன்றங்களை டிஜிட்டல் மயமாக்கி, சில முக்கிய சீர்திருத்தங்களை கொண்டுவர, உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அதே நேரம், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடக்கும் வழக்கு விசாரணைகள், தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட சில நடைமுறை சிக்கல்களால், தடைபடுவதை தடுப்பது குறித்தும், வழக்கறிஞர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். அது போன்ற தடைகளை களைவது குறித்தும், விவாதிக்கப்படும் என தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE