பாக்.,கில் அதிகரிக்கும் தொற்று: பிரதமரின் சிறப்பு உதவியாளர் எச்சரிக்கை

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், 'கொரோனா' தடுப்பு நடவடிக்கைகளை, மக்கள் ஒழுங்காக கடைப்பிடிக்காவிட்டால், வரும் வாரங்களில், வைரஸ் தொற்று எண்ணிக்கை, கடுமையாக உயரும் அபாயம் இருப்பதாக, அந்நாட்டு பிரதமரின் சிறப்பு உதவியாளர் எச்சரித்துள்ளார்.



latest tamil news



பாகிஸ்தானில், 52 ஆயிரத்து, 437 பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்து, 653 பேர், குணமடைந்துள்ளனர். இதுவரை, 1,101 பேர், பலியாகி உள்ளனர். கடந்த, 24 மணி நேரத்தில், 34 பேர் பலியாயினர்.

இது குறித்து, பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர், ஸபர் மிர்ஸா கூறுகையில், ''வைரஸ் தொற்று குறித்து, கடந்த வார அறிக்கை, திருப்திகரமாக இல்லை. ''தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் ஒழுங்காக பின்பற்றாவிட்டால், வரும் வாரங்களில், தொற்று எண்ணிக்கை, கடுமையாக உயரும் அபாயம் உள்ளது,'' என்றார்.


latest tamil news



இதற்கிடையே, கராச்சி மத்திய சிறையில் உள்ள, 300 கைதிகளுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு, 400 கைதிகள் வரை, தனிமைப்படுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதே நிலைமை தொடர்ந்தால், இடப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.மேலும், 20 போலீஸ் அதிகாரிகள் மற்றும் சிறை ஊழியர்களுக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A P - chennai,இந்தியா
24-மே-202012:48:40 IST Report Abuse
A P அந்த இரக்கமற்ற அரசு, எந்த விஷயத்திலும், தான் சொன்ன பேச்சை மக்கள் கேட்காவிடில், அனைவரையும் சுட்டுத்தள்ளக்கூட தயங்காது. அதுமாதிரியான ரத்தம் அவர்களுடையது. அந்த மக்களுக்கும் அதே ரத்தம் இருப்பதால், அடங்க்காப் பிடாரியாக இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Balakrishnan Kamesh - tiruvarur,இந்தியா
24-மே-202012:44:48 IST Report Abuse
Balakrishnan Kamesh பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் மூலம் CORONA காரியர்களை நம் நாட்டிற்கு அனுப்பி .. பரப்ப முயற்சிக்கலாம் .. நமது ராணுவம் கூடுதல் உஷாருடன் இருத்தல் சால சிறந்தது ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X