‛வீதியில் இறங்கி போராடுங்கள்': எதிர்கட்சிகளுக்கு யஷ்வந்த் சின்ஹா யோசனை

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (48)
Share
Advertisement
yashwant sinha, opposite parties, Coronavirus, Curfew, Lockdown, centre, congress, bjp, politics, யஷ்வந்த் சின்ஹா, எதிர்கட்சிகள்

புதுடில்லி : மனு கொடுப்பதெல்லாம் வேலைக்கு ஆகாது; மத்திய அரசை வழிக்கு கொண்டுவர வேண்டுமெனில், வீதிகளில் இறங்கி போராட எதிர்கட்சிகள் முன்வர வேண்டும்,'' என முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா, தலைமையில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம், டில்லியில் நடைபெற்றது. இதில், திரிணமுல் காங்.,, தி.மு.க., உள்பட, 22 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ.,வின் முன்னாள் தலைவர்களில் ஒருவருமான யஷ்வந்த் சின்ஹா, 'டுவிட்டரி'ல் கூறியிருப்பதாவது: மத்திய அரசு, ஏழைகள் படும் கடும் துயரத்தை காணாமலும், அவர்களது ஓலத்தை கேட்காமலும், உள்ளது. இந்நிலையில், வெறுமனே மனுகொடுப்பதும், அறிக்கை வெளியிடுவதும், வேலைக்கு ஆகாது. எதிர்கட்சிகள், வீதிகளில் இறங்கி போராட முன்வர வேண்டும். இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.


latest tamil news



ஏற்கனவே, கடந்த வாரம், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்களின் வீடுகளை சென்றடைவதற்கு உதவிடும் பணியில், ராணுவத்தினரை முழுவீச்சில் ஈடுபடுத்த வேண்டும்' என வலியுறுத்தி, மஹாத்மா காந்தி சமாதி முன்பாக, உண்ணாவிரதம் இருக்க முயன்றதால், யஷ்வந்த் சின்ஹா, டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டார் என்பது, குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-மே-202004:12:51 IST Report Abuse
J.V. Iyer பயித்தியம் ஆனால்தான் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பார்களா, இல்லை காங்கிரஸுடன் சேர்ந்தவுடன் பயித்தியம் ஆகிவிடுவார்களா?
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
24-மே-202018:18:30 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan பதவி கிடைக்காத வெறியில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு பித்து பிடித்து விட்டது.
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
24-மே-202017:27:21 IST Report Abuse
unmaitamil ஆதார் கார்டு மற்றும் அடையாள அட்டை உள்ளவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் உதவி பெறுகின்றனர். ரயிலிலோ பஸ்ஸிலோ அவர்கள் சொந்த ஊர் செல்ல மாநில அரசுகள் ஏற்பாடு செயகின்றது. அடையாள அட்டை இல்லாத பங்களாதேஷ், பாகிஸ்தான் நாட்டை சேந்த திருட்டுத்தனமாக தங்கியவர்கள் தான் இப்படி நடந்து செல்லின்றனர். இது பல இடங்களில் நிரூபிக்க பட்டுள்ளது. இந்த கேடு கெட்டவன், இப்படிப்பட்ட திருட்டுதனமாக நம் ஊரில் வாழ்பவர்களுக்கு போராடுகிறான். இப்படிப்பட்ட இக்கட்டான நேரத்திலும் மக்களை போராட தூண்டுகிறான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X