'ககன்யான்' விண்வெளி வீரர்களுக்கு பயிற்சிகள் மீண்டும் துவக்கம்

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

பெங்களூரு: 'ககன்யான்' திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, நான்கு இந்திய விண்வெளி வீரர்களுக்கும், ரஷ்யாவில் நிறுத்தி வைக்கப்பட்ட பயிற்சிகள், மீண்டும் துவக்கப்பட்டுள்ளன.



latest tamil news



விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம், வரும், 2022ம் ஆண்டு செயல்படுத்தப்படவுள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்திற்கு, இந்திய விண்வெளி வீரர்கள், நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நால்வருக்கும், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், பிப்ரவரி, 10ம் தேதி முதல், பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. இதற்கிடையே, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.


latest tamil news



இந்நிலையில், இந்திய விண்வெளி வீரர்கள், தங்கள் பயிற்சிகளை மீண்டும் துவக்கியுள்ளதாக, ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான, 'ரோஸ்கோஸ்மோஸ்' தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஜி.சி.டி.சி., எனப்படும் காகரின் ஆராய்ச்சி மற்றும் விண்வெளி வீரர்கள் பயிற்சி மையத்தில், இந்திய விண்வெளி வீரர்கள், தங்கள் பயிற்சிகளை, கடந்த,12 முதல், மீண்டும் துவங்கியுள்ளனர். நான்கு இந்திய வீரர்களும், நல்ல உடல்நலத்துடன் உள்ளனர். வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பயிற்சி மையம் முழுதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து ஊழியர்கள் மற்றும் பயிற்சி பெறும் வீரர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
24-மே-202014:18:26 IST Report Abuse
K.Sugavanam கொரோனா துவம்சம் செய்யும் இந்த நேரத்தில் இது ஒன்றுதான் மிச்சம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X