கொரோனாவால் கதிகலங்கும் ஏமன்; திணறும் சுகாதாரத்துறை

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020
Share
Advertisement

சனா: ஏமன் நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டில் மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.



latest tamil news



எனவே ஏமன் நாட்டுக்கு அவசர சிகிச்சை உதவி தேவை என ஐநா தெரிவித்துள்ளது. ஏமனில் சமூக பரவல் துவங்கிவிட்டது ஐநா செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ் லார்கே தெரிவித்துள்ளார். ஏமன் நாட்டில் சுகாதாரத் துறை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. போதுமான அளவு பிபிஇக்கள் வெண்டிலேட்டர்கள் ஏமனில் இல்லை.

இதனைத்தொடர்ந்து தற்போது சர்வதேச உதவியார்களை ஏமான் நாட்டுக்கு ஐநா அனுப்பி வைத்துள்ளது. ஏமனில் இரு வாரங்களில் 68 பேர் பலியாகி உள்ளனர். இதனால் எல்லைகள் அற்ற மருத்துவர்கள் சங்கம் ஏமன் நாட்டுக்கு உதவ முன்வந்துள்ளது. ஏமனில் அடிக்கடி ஏற்படும் கச்சா எண்ணெய்க்கான போர் காரணமாக ஊட்டச்சத்து குறைபாடுடன் குழந்தைகள் பிறக்கின்றன. இவர்களுக்கு அங்கு சரியாக உணவு, இருப்பிடம் கிடைப்பதில்லை. சவுதி அரசு ஏமனுக்கு உதவி வரும் நிலையில் மேற்காசிய நாடுகளில் மிகவும் பாதிப்புக்கு உள்ளான நாடான ஏமன் விளங்கி வருகிறது.


latest tamil news



இதுவரை ஏமனில் 30 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரட்டிப்பாகி வருகிறது. ஏமன் நாட்டுக்கு ஐநா 2 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்க உள்ளது. கடந்த ஆண்டு 4 பில்லியன் டாலர் உதவித்தொகை வழங்கப்பட்டது. சவுதி அரேபியா வரும் ஜூம் 2ம் தேதி அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஏமனில் ஏற்பட்டுள்ள நிலையை சீராக்க இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X