பொது செய்தி

தமிழ்நாடு

21-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Fuel, petrol price, diesel price, chennai, TN fuel price, TN news, பெட்ரோல், டீசல், சென்னை, விலை, லிட்டர்

சென்னை: சென்னையில் இன்று (மே 24) பெட்ரோல் விலை, லிட்டருக்கு 75.54 ரூபாய், டீசல் விலை, லிட்டருக்கு 68.22 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருவாயை பெருக்குவதற்காக, பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி, தமிழக அரசு, அரசாணை பிறப்பித்தது. இதன்படி, பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரி, 28லிருந்து, 34 சதவீதமாகவும், டீசல் மீதான வரி, 20லிருந்து, 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. அதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 3.26 ரூபாயும், டீசல் விலை, 2.51 ரூபாயும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, மே 4 முதல் அமலுக்கு வந்தது.


latest tamil news



இந்நிலையில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, 21-வது நாளாக ஒரே விலையில் தொடர்கிறது. இதன்படி, பெட்ரோல் 75.54 ரூபாயாகவும், டீசல் 68.22 ரூபாயாகவும் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராம.ராசு - கரூர்,இந்தியா
24-மே-202012:48:13 IST Report Abuse
ராம.ராசு "21-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை" என்பது சாதனையாக பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணை ரூபாய் நூற்று நாற்பதாக இருந்தபோதும் பெட்ரோல் விலை ரூபாய் எழுபத்து ஐந்தாக இருந்தது. கச்சா எண்ணெய் விலை 30 ரூபாய்க்கு கீழே இருக்கும்போதும் பெட்ரோல் விலை அதே எழுபத்து ஐம்பது ரூபாய் என்றால் இதில் பெருமைப் பட எதுவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அனைத்துத் தொழில்களும் முடங்கிப்போன நிலையில், சிறு குறு தொழில்களும் நொடிந்து போன நிலையில் பெட்ரோல் விலையில் கொஞ்சம் குறைத்து டீசல் விலையை ஐம்பது அல்லது ஐம்பத்தைந்து என்ற அளவிலாவது விற்பனை செய்தால், இவ்வளவு நாட்கள் பட்ட துன்பங்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக, மீண்டும் மக்கள் இயல்பு நிலைக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். அரசுகள் மனது வைத்தால் சாத்தியப்படக் கூடியதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X