மெக்சிகோ சிறையில் ஏழு கைதிகள் பலி

Added : மே 24, 2020
Share
Advertisement

மெக்சிகோ சிட்டி: வட அமெரிக்க நாடான, மெக்சிகோவின், ஜாலிஸ்கோ மாகாணத்தில் உள்ள சிறையில், இரு குழுக்களுக்கிடையே நடந்த மோதலில், ஏழு கைதிகள் கொல்லப்பட்டனர். இதில், நான்கு பேர் அடித்தும், மூவர் சுட்டும் கொல்லப்பட்டனர்; ஒன்பது கைதிகள் காயம் அடைந்தனர்.கைதிகளுக்கு சிறையின் உள்ளே, துப்பாக்கி கிடைத்தது எப்படி என, விசாரணை நடந்து வருகிறது. போதை மருந்து கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு, இச்சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு இடையே, இதுபோல அடிக்கடி மோதல் வெடிப்பது, வழக்கமாகி வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X