ம.பி.,யில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பிரசாந்த் கிஷோரை களமிறக்குது காங்.,

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (40)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய பிரதேசத்தில், 24 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைக்க, பா.ஜ.,வும், மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்., கட்சியும் முனைப்பு காட்டி வருகின்றன. காங்., கட்சி, பிரசாந்த் கிஷோருக்கு பிரசாரப் பொறுப்பு அளித்துள்ளது.மத்திய பிரதேசத்தில், 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வை விட சற்று கூடுதலான
Prashant Kishor, Madhya Pradesh, Bypolls, congress, BJP, election, mp, பாஜ, காங்கிரஸ், பிரசாந்த் கிஷோர்

புதுடில்லி: மத்திய பிரதேசத்தில், 24 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைக்க, பா.ஜ.,வும், மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்., கட்சியும் முனைப்பு காட்டி வருகின்றன. காங்., கட்சி, பிரசாந்த் கிஷோருக்கு பிரசாரப் பொறுப்பு அளித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில், 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வை விட சற்று கூடுதலான தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ், ஆட்சி அமைத்தது. கமல்நாத், முதல்வரானார். இந்தாண்டு துவக்கத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, 22 எம்.எல்,ஏ.,க்கள், பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்பட்டு, தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, மார்ச் இறுதியில், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசு பதவியேற்றது.


latest tamil news


இந்நிலையில், பா.ஜ., - காங்., ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு, எம்.எல்.ஏ.,க்கள் இறந்ததால், இரண்டு தொகுதிகள் காலியாக உள்ளன. இத்துடன், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்த, 22 தொகுதிகளும் காலியாக உள்ளன. இந்த, 24 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்தபின், இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.


பா.ஜ., மும்முரம்:


தற்போது, காங்கிரசை விட, பா.ஜ.,வுக்கு, 15 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே அதிகமாக உள்ளனர். இடைத்தேர்தலில், 20க்கும் மேற்பட்ட தொகுதிகளை காங்கிரஸ் வென்றால், ஆட்சி, மீண்டும் காங்கிரஸ் வசம் போய் விடும். எனவே மாநில பா.ஜ., தலைவர்கள் தேர்தல் பணிகளில் இப்போதே தீவிரம் காட்டி வருகின்றனர். கொரோனா மற்றும் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு, முழு வீச்சில் நிவராண பணிகளை செய்து வருகின்றனர். இதை, ஓட்டாக மாற்றும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர்.


காங்.,க்கு பிரசாந்த் கிஷோர்:


latest tamil news


அதே சமயம் காங்., கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க வியூகம் அமைத்து வருகிறது. அந்த வகையில், 2018 சட்டசபை தேர்தலில் பிரசாரப்பணி செய்த தேர்தல் நிபுணர், பிரசாந்த் கிஷோரையே, காங்., மீண்டும் அமர்த்தி உள்ளது. இதனையடுத்து அவர், குவாலியரில், முதல் தேர்தல் அலுவலகம் அமைத்து பணியை துவக்கி உள்ளார். அவரின் ஆலோசனையின் பேரில், வேட்பாளர்கள் அனைவரும் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன், காங்., இடைக்கால தலைவர் சோனியா, ம.பி.,யில் 11 மாவட்டங்களில், கட்சி நிர்வாகிகளை புதிதாக தேர்வு செய்தார். இந்த நடவடிக்கையும், பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையின் பேரிலேயே எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan - Chennai,இந்தியா
24-மே-202019:44:39 IST Report Abuse
Kannan இதிலிருந்து என்ன தெரியுது ? பிரஷாந்த் கிஷோர் பப்புக்களுக்கு டீச்சர். என்ன சொல்லி கொடுத்தாலும் பப்புகள் தேற மாட்டார்கள் ஏன் என்றால் இயற்கையிலேயே அவர்கள் கொஞ்சம் புத்தி சாலி கள் இல்லை. பாவம் அது அவர்கள் தயாரிப்பு குறைபாடு.
Rate this:
Cancel
Saravana kumar - Bangalore,இந்தியா
24-மே-202019:22:38 IST Report Abuse
Saravana kumar இந்த ஆளை பிடித்து சிறையில் போட்டால் இந்தியா உருப்படும் .
Rate this:
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
24-மே-202018:54:36 IST Report Abuse
Raja பி.கி க்கு நல்ல வருமானம். தமிழ்நாட்டுல தோ்தல்ல நின்னு சம்பாதிக்க நினைக்கும் உபிக்கள் கிசோரை தனியா சந்திச்சு பேரம் பேசலாம். அதிலும் வருமானம் கிடைக்கும். 2 மாநிலத்துலயும் ஊத்திகிட்டா பி.கி கதை நாறிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X