பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்டோக்கள் இயக்கம்; ஆனாலும் வருத்தம்: முழு விலக்கை எதிர்பார்க்கும் டிரைவர்கள்

Added : மே 24, 2020
Share
Advertisement

ஈரோடு: ஆட்டோக்கள் இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டால், எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை என்று, ஆட்டோ டிரைவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.


கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு அமலுக்கு வந்த, மார்ச், 24 முதல், பொது போக்குவரத்து வாகனங்கள் முழுவதும் இயங்க தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை. ஈரோடு மாநகரில், 200 ஆட்டோ ஸ்டாண்டுகளில், ?,690 ஆட்டோக்கள் ஓடுகின்றன. ஊரடங்கு தடையால், இவர்கள் வாழ்வாதாரம் இழந்தனர். தற்போது ஊரடங்கு தளர்வால், நேற்று முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஒரு ஆட்டோவில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று, கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதன்படி ஈரோடு மாநகரில், நேற்று ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. ஆனால், 1,000க்கும் குறைவான ஆட்டோக்கள் மட்டுமே இயங்கின. அதேசமயம் விதிமுறைப்படி ஆட்டோவில் ஒரு பயணி மட்டுமே ஏற்றப்படுகின்றனரா? என்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். இதுகுறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறியதாவது: ஆட்டோக்கள் இயங்க அனுமதிக்கப்பட்டாலும், ரயில், பஸ்கள் செல்லாததாலும், ஒருவரை மட்டுமே ஏற்ற வேண்டும் என்பதாலும், வழக்கமான எண்ணிக்கையில் ஆட்டோக்கள் இயங்கவில்லை. கட்டுப்பாட்டில் முழு விலக்கு அளிக்கப்பட்டால் மட்டுமே, ஆட்டோக்கள் வழக்கம்போல் இயக்கப்படும். அப்போதுதான் வருமானமும் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X