பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று பாதிப்பு: கவுந்தப்பாடி திருவள்ளுவர் வீதி 'தனிமை'

Added : மே 24, 2020
Share
Advertisement

கோபி: கொரோனா தொற்றுக்கு ஆளானவர் வசித்த, கவுந்தப்பாடி திருவள்ளுவர் வீதி, நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டது. பவானி யூனியன், கவுந்தப்பாடி பஞ்., திருவள்ளுவர் வீதியை சேர்ந்த, 52 வயதுடைய ஒருவர், பாஸ்ட் புட் கடையில் பணி செய்தார். திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர். டூவீலரில் பயணித்தபோது சமீபத்தில் விபத்தில் சிக்கினார். மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கொரோனா பரிசோதனையில், தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது. இதனால் அவர் வசித்த வீதியில், 45 வீடுகளை சேர்ந்த, 120 பேர் நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டனர். வீதியின் பிரதான வழிகளில் பேரிகார்டு வைக்கப்பட்டது. அதேசமயம் தொற்று உறுதியான நபரின் வீட்டருகே வசிக்கும், 30 பேரின் சளி மாதிரி நேற்று சேகரிக்கப்பட்டது. இந்த முடிவுகள் வந்த பிறகே, திருவள்ளுவர் வீதியை, 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துவதா அல்லது 28 நாட்களுக்கு தனிமைப்படுத்துவதா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


தலை தூக்கியும் அலட்சியம்: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கவுந்தப்பாடி பஞ்.,ல், 14 வீதிகளில் வசித்த, 1,862 வீடுகளை சேர்ந்த, 6,852 பேர், கடந்த மார்ச், 30 முதல் தனிமைப்படுத்தப்பட்டனர். அப்போது திருவள்ளுவர் வீதி தனிமைப்படுத்தப்படவில்லை. தற்போது மீண்டும் கவுந்தப்பாடி பஞ்.,ல் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று தலைதூக்கியும், கவுந்தப்பாடியில் மாஸ்க் அணியாமல் நடமாட்டம், சமூக விலகலை கடைப்பிடிக்காமல், மக்கள் அலட்சியம் அதிகரித்துள்ளதாக, வருத்தம் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X