சத்தியமங்கலம் பூ மார்க்கெட் இன்று முதல் செயல்படும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சத்தியமங்கலம் பூ மார்க்கெட் இன்று முதல் செயல்படும்

Added : மே 24, 2020
Share
புன்செய்புளியம்பட்டி: கொரேனா ஊரடங்கால், இரண்டு மாதமாக பூட்டப்பட்ட, சத்தியமங்கலம் பூ மார்க்கெட், இன்று முதல் மீண்டும் செயல்படுகிறது. இதுகுறித்து சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச், 25 முதல் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் விவசாயிகள் பலத்த

புன்செய்புளியம்பட்டி: கொரேனா ஊரடங்கால், இரண்டு மாதமாக பூட்டப்பட்ட, சத்தியமங்கலம் பூ மார்க்கெட், இன்று முதல் மீண்டும் செயல்படுகிறது. இதுகுறித்து சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச், 25 முதல் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் விவசாயிகள் பலத்த நஷ்டத்துக்கு ஆளாகினர். தற்போது ஊரடங்கு தளர்வால், சத்தியமங்கலம் பூ மார்க்கெட் நாளை (இன்று) முதல், மீண்டும் செயல்பட உள்ளது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, தாங்கள் கொண்டு வரும் பூக்களை, சமூக இடைவெளிவிட்டு, விவசாயிகள் விற்க வேண்டும். முகக்கவசம் அணிவது கட்டாயம். தற்போதைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மட்டும், பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X