மாநகரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாநகரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்

Added : மே 24, 2020
Share
ஈரோடு: ஈரோடு, பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை, மாநகர சாலை மிக குறுகலாக உள்ளது. பெரும்பாலான டவுன் பஸ்கள், பி.எஸ்.பார்க் மணிக்கூண்டு வழியாக பஸ் ஸ்டாண்ட் செல்கின்றன. இப்பகுதியில் சாலையின் இருபுறமும், நூற்றுக்கணக்கான ஜவுளி மற்றும் பல்வேறு கடைகள் உள்ளன. பல கடைகளின் முன் ஆக்கிரமிப்பு உள்ளதால், வாகன நெரிசல் வாடிக்கையாக உள்ளது. ஊரடங்கு நீடிக்கும் நிலையில்,

ஈரோடு: ஈரோடு, பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை, மாநகர சாலை மிக குறுகலாக உள்ளது. பெரும்பாலான டவுன் பஸ்கள், பி.எஸ்.பார்க் மணிக்கூண்டு வழியாக பஸ் ஸ்டாண்ட் செல்கின்றன. இப்பகுதியில் சாலையின் இருபுறமும், நூற்றுக்கணக்கான ஜவுளி மற்றும் பல்வேறு கடைகள் உள்ளன. பல கடைகளின் முன் ஆக்கிரமிப்பு உள்ளதால், வாகன நெரிசல் வாடிக்கையாக உள்ளது. ஊரடங்கு நீடிக்கும் நிலையில், இன்னும் சில நாட்களில் பஸ் போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளது. இதனால் பன்னீர்செல்வம் பார்க் முதல், மணிக்கூண்டு வரை, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சி கமிஷனர் உத்தவிட்டார். இதன்படி உதவி செயற்பொறியாளர் பாஸ்கரன் தலைமையில், இளநிலை பொறியாளர் சரவணன், துப்புரவு ஆய்வாளர்கள் கோபால், கண்ணன் மேற்பார்வையில், 50க்கும் மேற்பட்டோர் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர். விளம்பர தட்டிகள், பிளக்ஸ் பேனர், மரப்பெட்டிகள், உள்ளிட்டவற்றை லாரியில் எடுத்துச் சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X