பிறமாவட்ட தொழிலாளரை அனுமதிக்க பனியன் உற்பத்தியாளர்கள் முறையீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிறமாவட்ட தொழிலாளரை அனுமதிக்க பனியன் உற்பத்தியாளர்கள் முறையீடு

Added : மே 24, 2020
Share

ஈரோடு: பிற மாவட்ட, பிற மாநில தொழிலாளர்கள் வந்து செல்ல அனுமதி இல்லாததால், பனியன் உற்பத்தி தொழில் பாதிப்பதாக கூறி, ஈரோடு கலெக்டர் கதிரவனிடம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பொன்னுசாமி, தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் கடிதம் வழங்கினர்.


பின், அவர்கள் கூறியதாவது: இரண்டு மாதங்களாக பின்னலாடை தொழில் இயக்கம், ஊரடங்கால் நிறுத்தப்பட்டது. தற்போது தளர்வால் தொழிலை துவங்க அனுமதி கிடைத்தபோதிலும், பிற மாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு திரும்பி செல்ல துவங்கி உள்ளனர். பிற மாவட்ட தொழிலாளர்களும், திருப்பூர் மாவட்டத்துக்குள் வர அனுமதி இல்லை. திருப்பூர் மாவட்ட பின்னலாடை தொழில், குன்னத்தூர், ஊத்துக்குளி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பகுதிகளையே பெரிதும் நம்பியுள்ளது. எனவே, ஈரோடு மாவட்ட பகுதிகளில் இருந்து, திருப்பூர் மாவட்டத்துக்கு தொழிலாளர்களை அழைத்து வரவும், பிற மாவட்டங்களில் இருந்து ஈரோடு - திருப்பூர் மாவட்ட பகுதிகளுக்கு அழைத்து செல்லவும் அனுமதி வழங்க வேண்டும். அரசு விதிகளுக்கு உட்பட்டு அழைத்து வருவோம். 50 சதவீத தொழிலாளர்களை வைத்து தொழிலை துவங்க அனுமதித்தால் தொழில் தொடர்ந்து நடக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X