பொது செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம் அணியாமல் வலம்; பெண்கள் எண்ணிக்கை அதிகம்

Added : மே 24, 2020
Share
Advertisement

ஈரோடு: முகக்கவசம் அணியாமல், மாநகரில் பெண்கள் நடமாடுவது, அதிகரித்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஈரோட்டில் ஊரடங்கில் தளர்வு வழங்கப்பட்டாலும், சுய பாதுகாப்பு அவசியம்; தேவையின்றி வெளியில் நடமாடக்கூடாது. அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே, அதுவும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். மாஸ்க் அணியாதவர்களுக்கு, நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. மாநகரில் இதுவரை, 4,000 பேரிடம், நான்கு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்பதுதான் வருத்தமளிக்கிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X