சம்பவம் செய்தி

தமிழ்நாடு

17 வயது சிறுமியை கடத்திய சலூன் கடைக்காரர் கைது

Added : மே 24, 2020
Share
Advertisement

அம்மாபேட்டை: அம்மாபேட்டை அருகே, சிறுமியை கடத்திய, கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். அம்மாபேட்டை அருகே, குருவரெட்டியூரை சேர்ந்தவர் பிரபாகரன், 22; சலூன் கடை வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியை, ஆசை வார்த்தை கூறி கடந்த மார்ச், 23ல் நெல்லை மாவட்டம், வள்ளியூருக்கு கடத்திச் சென்றார். பெற்றோர் புகாரின்படி, அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, சிறுமியை தேடி வந்தனர். விசாரணையில் பிரபாகரன் கடத்திச் சென்றது தெரிந்தது. இந்நிலையில் குருவரெட்டியூர் பஸ் நிறுத்தம் அருகே, அவரை நேற்று கைது செய்தனர். அவர் தந்த தகவலின்படி, சிறுமியையும் மீட்டனர். போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, பிரபாகரனை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X