சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன் அருகே சந்தனமரம் வெட்டி கடத்தல்

Added : மே 24, 2020
Share
Advertisement

புன்செய்புளியம்பட்டி: தாளவாடி போலீஸ் ஸ்டேஷன் அருகே, வங்கி வளாகத்தில் இருந்த, சந்தன மரத்தை வெட்டி கடத்தியவர்களை, போலீசார் தேடி வருகின்றனர். தாளவாடி போலீஸ் ஸ்டேஷன் அருகே, சி.எஸ்.ஐ., சர்ச்க்கு சொந்தமான கட்டடத்தில், கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. வளாகத்தில் சந்தன மரம் வளர்க்கப்பட்டு வந்தது. நேற்று காலை மரம் அடியோடு வெட்டப்பட்டிருந்தது. தாளவாடி போலீசார் ஆய்வு செய்தனர். நேற்று விடுமுறை என்பதால் வங்கி பணிக்கு ஊழியர்கள் யாரும் வரவில்லை. இதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமராவில் ஏதாவது தடயம் சிக்குகிறதா? என்பதை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். போலீஸ் ஸ்டேஷன் அருகில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X