தமிழ்நாடு

ஊராட்சி தலைவரின் கணவர் தலையீடு எதிரொலி: பெண் பிரதிநிதிகளின் குடும்பத்தினருக்கு தடை

Added : மே 24, 2020
Share
Advertisement

ஆத்தூர்: தி.மு.க.,வை சேர்ந்த, மாசிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவரின் கணவர் தலையீடு புகாரால், அனைத்து ஊராட்சிகளில் பெண் பிரதிநிதிகளின் குடும்பத்தினர், நிர்வாகத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில், பெண்கள் பலர், ஊராட்சி தலைவர், கவுன்சிலர் பதவியில் உள்ளனர். அவர்களின் கணவர், உறவினர் தலையீடு இருக்கக்கூடாது; அப்படி இருந்தால், நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தில், நேற்று முன்தினம் நடந்த, கவுன்சிலர் ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க., - பா.ம.க., பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் பங்கேற்று, பி.டி.ஓ.,க்கள் சந்திரசேகர், அருள்பாரதியிடம் கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதவிர, அயோத்தியாப்பட்டணம், மாசிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர், தி.மு.க.,வைச் சேர்ந்த மேகலா. அவரது கணவர் தேவேந்திரன், ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதாக, கடந்த, 3ல், துணைத்தலைவர் அருண்குமார் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள், சேலம் கலெக்டர் ராமன், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் கோபிநாத்திடம் புகாரளித்தனர்.

இதுதொடர்பாக, அனைத்து ஒன்றிய பி.டி.ஓ., - ஊராட்சி தலைவர்களுக்கு, நேற்று, கோபிநாத் அனுப்பிய சுற்றறிக்கை: மாசிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவரின் கணவர் தலையீடு செய்வதாக புகார் வந்தது. அதுகுறித்து விசாரித்தபோது உறுதியானது. இதனால், மாசிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவரின் கணவர், இனி கிராம ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என, ஊராட்சி தலைவருக்கு, பி.டி.ஓ., மூலம் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், ஊராட்சி விதிப்படி, இதுமாதிரி நிகழ்வு ஏற்கதக்கதல்ல என்பதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தலைவர் உள்ள ஊராட்சிகளில், அவரது கணவர், உறவினர், வேறு யாரும் ஊராட்சி நிர்வாகத்திலும், ஊராட்சி கூட்டங்களிலும் தலையிடக்கூடாது என, அனைத்து ஊராட்சி தலைவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வு ஏற்படாதபடி கண்காணிக்க, பி.டி.ஓ.,க்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X