ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் தர்ணா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் தர்ணா

Added : மே 24, 2020
Share

ஆத்தூர்: குடிநீர் கேட்டு, பைத்தூர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள், காலிக்குடங்களுடன், தர்ணாவில் ஈடுபட்டனர். ஆத்தூர், பைத்தூர் ஊராட்சி, நைனார்பாளையத்தில், 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள, 100க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று மதியம், 12:00 மணிக்கு, பைத்தூர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, காலிக்குடங்களுடன் தர்ணாவில் ஈடுபட்டனர். பின், தலையில் குடங்களை வைத்துக்கொண்டு, குடிநீர் கேட்டு கோஷம் எழுப்பினர். ஆத்தூர் ஊரக போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, மக்கள் கூறியதாவது: இருபது நாளுக்கு மேலாக, காவிரி குடிநீர் வினியோகம் இல்லை. ஆழ்துளை கிணறு அமைக்க, ஊராட்சி தலைவர் கலைச்செல்வியிடம் தெரிவித்தும் பலனில்லை. பிரச்னைக்கு தீர்வு காணவில்லை எனில், தொடர் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர். ஊராட்சி தலைவர் கலைச்செல்வி கூறுகையில், ''புங்கவாடி வழிப்பாதையில், குழாய் உடைந்ததால், ஆறு நாளாக தண்ணீர் வரவில்லை. விரைவில் சீரமைக்கப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X