பொது செய்தி

தமிழ்நாடு

சாலை பணிக்கு ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு: ஓராண்டாக பணியை தொடங்காத அதிகாரிகள்

Added : மே 24, 2020
Share
Advertisement

கொளத்தூர்: ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பால், ஓராண்டாக, சாலை பணியை தொடங்க முடியாமல், அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.
கொளத்தூர், சிங்கிரிப்பட்டி ஊராட்சி, மாங்காடு, பெருமாள் கோவில் குடியிருப்பு உள்ளது. அங்கு, 2018 - 19ல், பிரதான சாலை முதல், பெருமாள் கோவில் குடியிருப்பு வரை, 300 மீட்டர் நீளம், 3.75 மீட்டர் அகலம் தார்ச்சாலை அமைக்க, அரசு, 14வது நிதிக்குழு மானியத்தில், 60 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. சாலை அமைக்க திட்டமிட்டிருந்த புறம்போக்கு நிலம், அப்பகுதியைச் சேர்ந்த சிலரது ஆக்கிரமிப்பில் இருந்தது. அரசு நிதி ஒதுக்கியதை அறிந்த ஆக்கிரமிப்பாளர்கள் இருவர், நிலத்தின் ஒரு பகுதியை, மற்றொருவருக்கு விற்றனர். அந்த நபர் உள்பட ஆக்கிரமிப்பாளர்கள், சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால், பணி ஓராண்டாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், பணியை தொடங்க முயன்றபோது, ஆக்கிரமிப்பாளர்களுக்கும், குடியிருப்புவாசிகளுக்கும் இடையே மோதல் உருவானது. இதனால், பணி தொடங்கப்படவில்லை. மத்திய அரசு, நடப்பாண்டு, 15வது நிதிக்குழு மானியம் ஒதுக்கி திட்டப்பணியை தொடங்கிவிட்டது. ஆனால், 14வது நிதிக்குழு மானியத்தில் தொடங்கிய சாலை பணியை தொடங்க முடியாமல், கொளத்தூர் ஒன்றிய அலுவலர்கள் அலட்சியமாக உள்ளனர். இதனால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X