மணப்பெண்ணுக்கு கொரோனா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மணப்பெண்ணுக்கு கொரோனா?

Added : மே 24, 2020
Share
சேலம்: மணப்பெண்ணுக்கு, 'கொரோனா' தொற்று அறிகுறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து, சுகாதாரத்துறையினர் கூறியதாவது: சேலம் மாவட்டம், கெங்கவல்லியைச் சேர்ந்த, 26 வயது பெண், சென்னை, வடபழனியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவருக்கும், கெங்கவல்லியைச் சேர்ந்த, 28 வயது உறவினருக்கும், மே 24ல்(இன்று) திருமணம் செய்ய, கடந்த ஜனவரியில், இருவீட்டினரும் முடிவு செய்தனர்.

சேலம்: மணப்பெண்ணுக்கு, 'கொரோனா' தொற்று அறிகுறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, சுகாதாரத்துறையினர் கூறியதாவது: சேலம் மாவட்டம், கெங்கவல்லியைச் சேர்ந்த, 26 வயது பெண், சென்னை, வடபழனியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவருக்கும், கெங்கவல்லியைச் சேர்ந்த, 28 வயது உறவினருக்கும், மே 24ல்(இன்று) திருமணம் செய்ய, கடந்த ஜனவரியில், இருவீட்டினரும் முடிவு செய்தனர். கடந்த, 21ல், சென்னையிலிருந்து வந்தபோது, தலைவாசல், நத்தக்கரை சோதனைச்சாவடி மையத்தில் பரிசோதனை செய்தனர். அதில், மணப்பெண்ணுக்கு, 'கொரோனா'அறிகுறி இருப்பது தெரிந்தது. இன்று(நேற்று), மருத்துவ குழுவினர், அவரது வீட்டுக்கு சென்று, மணப்பெண்ணுக்கு மீண்டும் பரிசோதனை செய்தனர். அவருடன் வந்த, 12 பேரில், ஒன்பது பேருக்கு, சோதனை செய்யப்பட்டுள்ளது. நாளை(இன்று), சமூக இடைவெளியில், ஐந்து பேருடன் திருமணம் நடத்திக்கொள்ளவும். தொடர்ந்து, அனைவரும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, வெளியே செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கி, வீடு உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. திருமணம் முடிந்ததும், நோய் தடுப்பு பணி முழுமையாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X