பொது செய்தி

தமிழ்நாடு

காவிரியில் நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

Added : மே 24, 2020
Share
Advertisement

மேட்டூர்: தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள காவிரியில், மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மே மாதம், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீர், கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்டது. இதனால், இரு நாளுக்கு முன், தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள காவிரியாற்றில், நீர்வரத்து வினாடிக்கு, 5,000 கனஅடியாக அதிகரித்த நிலையில், நேற்று முன்தினம், நீர்வரத்து, 1,500 கனஅடியாக சரிந்தது. இரு மாநில எல்லையில் தீவிரமடைந்த மழையால், நேற்று, தமிழக எல்லையிலுள்ள காவிரியாற்றில், நீர்வரத்து வினாடிக்கு, 3,000 கனஅடியாக அதிகரித்தது. நேற்று, மேட்டூர் அணை நீர்மட்டம், 100.29 அடியாக இருந்தது. வினாடிக்கு, 1,787 கனஅடி நீர் வந்தது. இன்று, மேட்டூர் அணை நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X