சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் கோபுரம் சரிந்து வீட்டு மேற்கூரை சேதம்

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020
Share
Advertisement

சேலம்: மொபைல் போன் கோபுரம் சரிந்து, வீட்டு மேற்கூரை சேதமடைந்தது. சேலத்தில், நேற்று, 39.4 டிகிரி செல்ஷியஸ் வெயில் கொளுத்தியது. இது, பாரன்ஹீட் அளவில், 103 டிகிரி. காற்றின் ஈரப்பதம் 44 சதவீதமாக இருந்தது. நேற்று முன்தினம், வெயில், 103.7 டிகிரி செல்ஷியஸ். ஆனால், ஈரப்பதம், 37 சதவீதமாக குறைந்து காணப்பட்டதால், வெப்பம் தகித்தது. மாலையில், கருமேகம் திரண்டு, இதமான காற்று வீசியது. இரவில், ஆங்காங்கே, இடி, சத்தத்துடன், பலமான காற்று வீசியது. சில இடங்களில், கனமழை, சில இடங்களில், மிதமான மழை பதிவானது. அதிகபட்சம், இடைப்பாடியில், 50.2 மி.மீ., மழை பெய்தது. சங்ககிரி, 29.2, ஏற்காடு, 24.6, காடையாம்பட்டி, 7.6, சேலம், 6, வாழப்பாடி, 2 மி.மீ., மழை பெய்தது. பலமான காற்று வீசியதில், சேலம், தென் அழகாபுரத்தில், மொபைல் போன் கோபுரம் விழுந்து, வீட்டின் மேற்கூரை சேதமானது. இதுகுறித்து, அழகாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வேரோடு சாய்ந்த மரம்: ஆட்டையாம்பட்டியில், நேற்று முன்தினம், சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால், ஏராளமான மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன. எஸ்.பாப்பாரப்பட்டி ஏரிக்கரையில், சாலையோரமிருந்த புளிய மரம், வேரோடு சாய்ந்தது. ஆனால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X