சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசார் எச்சரிக்கைக்கு பின் தொழிலாளி சாவு: சாலை மறியலில் ஈடுபட்ட 15 பேர் கைது

Added : மே 24, 2020
Share
Advertisement

சேலம்: போலீசார் எச்சரிக்கைக்கு பின், வெள்ளி தொழிலாளி இறந்ததால், சாலை மறியலில் ஈடுபட்ட, 15 பேரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம், திருவாக்கவுண்டனூர் அருகே, சுகுமார் காலனியைச் சேர்ந்தவர் சரவணன், 50. வெள்ளி தொழிலாளி. இவரது வீடு அருகேவுள்ள அரசு நிலத்தை, அ.தி.மு.க., பிரமுகர் திலகா, 40, ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது. நெடுஞ்சாலை நகர் கூட்டுறவு வங்கி இயக்குனராக உள்ள திலகாவிடம், நில ஆக்கிரமிப்பு தொடர்பாக, கடந்த, 21ல், சரவணன் தகராறு செய்தார். அதில், அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக, திலகா புகார்படி, சூரமங்கலம் போலீசார், சரவணனை அழைத்து விசாரித்து, எச்சரித்து அனுப்பினர். மறுநாள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சரவணன், மதியம் வரை எழவில்லை. சந்தேகமடைந்து, அவரது மனைவி பழனியம்மாள் எழுப்பியபோது, கணவர் இறந்தது தெரிந்தது. எனினும், சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மாரடைப்பில் இறந்ததாக, மருத்துவர்கள் கூறினர். இச்சம்பவத்துக்கு உரிய தீர்வு காண, நேற்று காலை, 10:00 மணிக்கு, ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலர் ஞானசவுந்தரி தலைமையில், அவரது கணவர் இருதயசாமி உள்பட பலர், திருவாக்கவுண்டனூர் பைபாஸ் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களில், 15 பேரை கைது செய்த போலீசார், மாலையில் விடுவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X