உ.பி., மாணவர்களை அனுப்பியதற்கு கூடுதலாக ரூ.36 லட்சம் வசூலித்த காங்., அரசு

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement
லக்னோ: ராஜஸ்தானில் சிக்கி தவித்த உ.பி., மாணவர்களை, பஸ்களில் அனுப்பி வைத்ததற்கு ரூ.36 லட்சம் கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளது ராஜஸ்தான் அரசு. இதற்கு பா.ஜ.,வும், மாயாவதியும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தானில் சுமார் 12,000 மாணவர்கள் சிக்கி தவித்தனர். கோடா நகரில் சிக்கிய அவர்களை,
UP, Rajasthan, Congress, Uttar Pradesh, up, Mayawati, Rajasthan govt, buses, Kota students, உத்தரபிரதேசம்,காங்கிரஸ்

லக்னோ: ராஜஸ்தானில் சிக்கி தவித்த உ.பி., மாணவர்களை, பஸ்களில் அனுப்பி வைத்ததற்கு ரூ.36 லட்சம் கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளது ராஜஸ்தான் அரசு. இதற்கு பா.ஜ.,வும், மாயாவதியும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தானில் சுமார் 12,000 மாணவர்கள் சிக்கி தவித்தனர். கோடா நகரில் சிக்கிய அவர்களை, ராஜஸ்தான் மாநில காங்., அரசு , உ.பி.,க்கு பஸ்களில் அனுப்பி வைத்தது. இதற்கு கட்டணமாக ரூ.19 லட்சம், ராஜஸ்தான் அரசு கேட்டதையடுத்து, அதற்கான செக்கை, உ.பி., அரசு அளித்தது.


latest tamil newsஇந்நிலையில், கூடுதலாக ரூ.36 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் அளிக்குமாறு ராஜஸ்தான் அரசு மீண்டும் கேட்டதையடுத்து, உ.பி., அரசு அதையும் அளித்துள்ளது. அந்த விவரங்கள் தற்போது கசிந்ததையடுத்து பா.ஜ., மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

உ.பி., மாநில பா.ஜ., பொதுச்செயலர் விஜய் பகதூர் பதக் கூறுகையில், 'மக்களுக்கு சேவை செய்வதாக கூறி வரும், காங்., கட்சியின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது' என்றார்.

மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில், 'ராஜஸ்தான் அரசு கூடுதலாக ரூ.36 லட்சம் கேட்டுள்ளது, அக்கட்சியின் மனிதத்தன்மையற்ற செயலை காட்டுகிறது. அண்டை மாநிலங்களுக்கு இடையே அருவருப்பு அரசியல் வருந்த வைக்கிறது' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
26-மே-202009:55:47 IST Report Abuse
Sampath Kumar ஆஹா அற்புதம் நீங்க கத்தார் நாட்டில் இருந்து வந்தவர்களிடம் எத்தனை அடித்தீர்கள் என்று நியூஸ் போட முடியுமா? வந்தவர்களிடம் கேளுங்கள் suma வெற்பு அரசியில் பேணுவதில் ஒரு மண்ணும் இல்லை
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
24-மே-202020:05:24 IST Report Abuse
Rajas முதலில் கொடுத்த பில் உபி அரசு பஸ்களுக்கு ராஜஸ்தான் அரசின் போக்குவரத்து கழகம் டீசல் போட்டதற்க்காகவும் இரண்டாவது பில் ராஜஸ்தான் அரசின் பஸ்களை உபி அரசின் வேண்டுகோளின் படி உபி க்கு இயக்கியற்காகன பில் என்று தெரிகிறது .
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-மே-202019:13:08 IST Report Abuse
தமிழவேல் அவனுவோ தான் அதிகாலா 36 லட்சம் கேட்டானுவோ. Ok? இவனுவோ ஏன் குடுத்தானுவோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X