பொது செய்தி

தமிழ்நாடு

தெருக்களில் உலா வந்த அரிய வகை வெளிநாட்டு பறவை

Added : மே 24, 2020
Share
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், தெருக்களில் உலா வந்த அரிய வகை, வெளிநாட்டு கரண்டிவாயன் பறவையை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். திருவண்ணாமலை, புது கார்கனார் தெருவில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில், ஒரு பறவை அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்து உலா வந்தது. இது பார்ப்பதற்கு வித்தியாசமான தோற்றத்துடன் காணப்பட்டதால் அதை பார்க்க அப்பகுதி மக்கள் குவிந்தனர். மேலும், இது குறித்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து, பறவையை மீட்டனர். அப்போது, அது, வெளிநாட்டு பறவையான கரண்டிவாயன் பறவை வகையை சேர்ந்தது என தெரியவந்தது. இதையடுத்து அதை, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X