சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பச்சிளம் பெண் சிசு சாவில் சந்தேகம்: சடலத்தை தோண்டி உடற்கூறு ஆய்வு

Added : மே 24, 2020
Share
Advertisement

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அருகே, இறந்த பச்சிளம் பெண் சிசு சாவில் சந்தேகமுள்ளதாக, அரசு டாக்டரின் புகாரின்படி, புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த இரும்புலியை சேர்ந்தவர் தவமூர்த்தி, 35; இவரது மனைவி பிரியா, 32; தம்பதியினருக்கு, ஏற்கனவே, ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், மீண்டும் கர்ப்பமான பிரியாவுக்கு, கடந்த, 20ல், காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்த பெண் சிசுவுக்கு கடந்த, 21ல், உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தது. இதையடுத்து கடந்த, 22ல், இரும்புலி மயானத்தில் புதைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அஹிதா, பெண் சிசுவின் சாவில் சந்தேகம் இருப்பதாக, கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். இதன்படி போலீசார், ஆரணி தாசில்தார் பாலாஜி மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர் கமலக்கண்ணன் தலைமையில் நேற்று, புதைக்கட்ட பச்சிளம் பெண் சிசுவின் சடலத்தை தோண்டி உடற்கூறு ஆய்வு செய்தனர். கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X