பொது செய்தி

தமிழ்நாடு

மொய் விருந்தில் சமூக இடைவெளி பின்பற்ற க்யூ.ஆர்., கோடு அறிமுகம்

Added : மே 24, 2020
Share
Advertisement

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில், மொய் விருந்து மற்றும் திருமண நிகழ்ச்சிகளில், கூட்ட நெரிசலை தவிர்க்க, க்யூ.ஆர்., கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்தவர் பிரவீன்குமார்,40. இவர், திருமணம் மற்றும் மொய் விருந்து விழாக்களில், விரைவாக மொய் வாங்குவதற்கென, ஒரு சாப்ட்வேர் தயாரித்துள்ளார். அதில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், க்யூ.ஆர்., கோடு அறிமுகம் செய்துள்ளார்.

இது குறித்து, பிரவீன்குமார் கூறியதாவது: திருமணம், காதணி, மொய்விருந்து போன்ற விழாக்களில், மொய் மற்றும் அன்பளிப்புகள், நோட்டில் எழுதப்படும். கூட்ட நெரிசலால், பெயர், ஊர், பணம் போன்றவற்றை, நோட்டில் எழுதுவது கஷ்டமாக இருக்கும். தற்போது, சமூக இடைவெளி அவசியமாகி விட்டதால், க்யூ.ஆர்., கோடு முறையில் மொய் எழுதுவதற்கான, 'மொபைல் ஆப்' உருவாக்கி உள்ளேன். இதில், மொய் செய்பவர்களின், க்யூ.ஆர்., கோடு படத்தை ஸ்கேன் செய்து, பணத்தை பெற்று கொள்ளலாம். இதனால், மொபைல் போன் மட்டும் இருந்தால் போதும்; மொய் எழுதுவதில் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம். அடுத்தவரிடம் கொடுத்து அனுப்பிய மொய் எழுதப்பட்டுள்ளதா, இல்லையா என, வாட்ஸ் ஆப், எஸ்.எம்.எஸ்., வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம். மேலும், வீட்டில் இருந்தபடியே, க்யூ.ஆர்., கோடு வாயிலாகவும், மொய் செய்யலாம். விழாக்களுக்கு நேரடியாகச் சென்று, மிகக் குறைந்த செலவில், 'மொய் சாப்ட் ஆப்' முறையில், மொய் வசூல் செய்து கொடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X