பொது செய்தி

தமிழ்நாடு

பட்டுக்கூடு அங்காடியில் ரூ.20 லட்சத்துக்கு ஏலம்

Added : மே 24, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் கடந்த, 10 நாட்களில், 20 லட்சம் ரூபாய்க்கு, பட்டுக் கூடுகள் ஏலம் நடந்துள்ளது. தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில், நாள்தோறும் நடக்கும் ஏலத்தில், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நாள்தோறும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்பால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், அங்காடியில் பட்டு ஏலம் நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளுடன், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், பட்டு ஏலம் நடந்து வருகிறது. இதன்படி, கடந்த, 10 நாட்களில் நடந்த ஏலத்தில், 122 விவசாயிகள், 206 குவியல்களாக, 9,467 கிலோ வெண்பட்டுக் கூடுகளை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். இது, 125 முதல், 305 ரூபாய் என சராசரியாக, 221 ரூபாய்க்கு ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு, 20 லட்சத்து, 94 ஆயிரத்து, 712 ரூபாயாகும். 10 நாட்களில் நடந்த ஏலத்தில், மஞ்சள் பட்டுக்கூடுகளை விவசாயிகள் யாரும் கொண்டு வரவில்லை. இந்த ஏலத்தால், 31 ஆயிரத்து, 422 ரூபாய் அரசுக்கு வருவாயாக கிடைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X