பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு வீரர்கள் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

Added : மே 24, 2020
Share
Advertisement

தர்மபுரி: தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்தவர்கள் உயரிய விருது பெற விண்ணப்பிக்கலாம் என, தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய அரசால், ஆண்டுதோறும் தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைக்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் துரோணாச்சாரியா, அர்ஜூனா, தயான் சந்த் உட்பட, பல்வேறு உயரிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2020ம் ஆண்டுக்கான இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளதால், இதற்காக விண்ணப்பிக்கலாம். தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ள தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுனர்கள், www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இதற்கான, விண்ணப்பங்கள் உள்ளிட்ட முழு விபரங்களை பதிவிறக்கம் செய்து அறிந்து கொள்ளலாம். தகுதியான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுனர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும், 26க்குள், உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், எண்: 116 -ஏ, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை நேரு பூங்கா, சென்னை- 600 084, என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X