கேரளாவிலிருந்து நடந்தே வந்த வியாபாரி மாரடைப்பால் சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரளாவிலிருந்து நடந்தே வந்த வியாபாரி மாரடைப்பால் சாவு

Added : மே 24, 2020
Share

பென்னாகரம்: சொந்த ஊருக்கு கேரளாவிலிருந்து, நடந்தே வந்த பாய் வியாபாரி, ஈரோடு அருகே மாரடைப்பால் உயிரிழந்தார்.
பென்னாகரம் அடுத்த தொன்னகுட்ட அள்ளி பஞ்.,க்கு உட்பட்ட சிடுமனஅள்ளி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் மகேந்திரன், 50; இவருக்கு திருமணமாகி அலமேலு என்ற மனைவியும், நான்கு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த இரண்டு மாதத்துக்கு முன், பாய் வியாபாரத்துக்கு, கேரளா சென்றுள்ளார். ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்த அவர், கடந்த புதன்கிழமை நடந்தே ஊர் திரும்ப முடிவு செய்துள்ளார். தொடர்ந்து, 250 கி.மீ., தொலைவு நடந்தே வந்தார். நேற்று முன்தினம், ஈரோடு அருகே நெடுஞ்சாலையோரம் மயங்கி விழுந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதனையில், அவர் மாரடைப்பால் இறந்தது தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு, அவரது சடலத்தை சொந்த ஊரான சிடுமன அள்ளி அருந்தியர் காலனிக்கு, ஈரோடு மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைத்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X