சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி டிரைவர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது

Added : மே 24, 2020
Share
Advertisement
காரிமங்கலம்: லாரி டிரைவரான கணவரை கொலை செய்து நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலனுடன் கைதானார்.தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பிச்சானுரை சேர்ந்த லாரி டிரைவர் மாரியப்பன், 32; இவருடைய மனைவி நதியா, 27; இவர்களுக்கு கடந்த, மூன்றாண்டுகளுக்கு முன், திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாரியப்பன் வீட்டில் மர்மான முறையில் இறந்துள்ளார். நதியாவின் அழுகுரல்

காரிமங்கலம்: லாரி டிரைவரான கணவரை கொலை செய்து நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலனுடன் கைதானார்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பிச்சானுரை சேர்ந்த லாரி டிரைவர் மாரியப்பன், 32; இவருடைய மனைவி நதியா, 27; இவர்களுக்கு கடந்த, மூன்றாண்டுகளுக்கு முன், திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாரியப்பன் வீட்டில் மர்மான முறையில் இறந்துள்ளார். நதியாவின் அழுகுரல் கேட்டு அப்பகுதியினர் வந்தனர். தகவலின்படி, காரிமங்கலம் போலீசார், மாரியப்பனின் உடலை கைப்பற்றி, நதியாவிடம் விசாரித்தனர். அவர், முன்னுக்கு, பின் முரணாக பதில் கூறியுள்ளார். மேலும், மாரியப்பன், மூச்சுத்திணறி இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்ததால், சந்தேகத்தின்படி, நதியாவிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதில், நதியாவுக்கும், திண்டலை சேர்ந்த முரளி, 23 என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. ஊரடங்கால் வீட்டிலிருந்த மாரியப்பனுக்கு, இதுகுறித்து தெரிந்துள்ளது. இதனால், அவர், கள்ளக்காதலை கைவிட்டு ஒழுங்காக குடும்பம் நடத்த கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த நதியா, தன் கள்ளக்காதலன் முரளியுடன் சேர்ந்து, மாரியப்பனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு முரளியுடன் சேர்ந்து, வீட்டில் தூங்கி கொண்டிருந்த மாரியப்பனின் முகத்தில், தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார். இதையடுத்து, காரிமங்கலம் போலீசார், நதியா, முரளி ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X