பொது செய்தி

தமிழ்நாடு

முப்படை ஓய்வூதியர் புதிதாக வீடு கட்ட, வாங்க மானியம்

Added : மே 24, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், முப்படைகளில் அவில்தார் பொறுப்பில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, புதிதாக வீடு வாங்க, கட்ட, ஒரு லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என, மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் பிரேமா தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: முப்படைகளில் அவில்தார் மற்றும் அதற்கு இணையான படைத்தளம் வரையிலான முன்னாள் படைவீரர்கள் மற்றும் போர் விதவையர், போரில் ஊனமுற்றோர் என அனைத்து தரப்பினரும், 2020 - 2021ம் நிதியாண்டு முதல், வங்கி கடன் பெற்று சொந்தமாக புதிய வீடு கட்டவும், வாங்குவதற்கும், ஒரு லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலிருந்து, சொந்த வீடு கட்ட அல்லது வாங்க, 2020 ஏப்.,1க்கு பின் வங்கிக்கடன் பெற்றவராக இருக்க வேண்டும். நிரந்தர மறு வேலைவாய்ப்பு பெற்றவராக இருக்கக்கூடாது. புதியதாக கட்டப்படும், வாங்கப்படும் வீடுகளுக்கு மட்டுமே மானியம் பொருந்தும். மேலும் விபரங்களுக்கு, 04343 236134 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X