பொது செய்தி

தமிழ்நாடு

மூன்றாம் கட்டமாக சிறப்பு ரயில் இயக்கம்: 1,616 தொழிலாளர்கள் ஜார்கண்ட் பயணம்

Added : மே 24, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மூன்றாம் கட்டமாக, 1,616 தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் ஜார்கண்ட் மாநிலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றிய, வெளிமாநில தொழிலாளர்கள், ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதால், அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதன்படி, ஓசூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கடந்த, 21ல் இயக்கிய சிறப்பு ரயிலில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த, 1,600 தொழிலாளர்களும், நேற்று முன்தினம் இயக்கிய சிறப்பு ரயிலில், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றிய, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, 1,504 பேரும், அவர்களது சொந்த மாநிலம் சென்றனர். இந்நிலையில் மூன்றாம் கட்டமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த, 1,613 பேர் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றி வரும், மூன்று பேர் என மொத்தம், 1,616 தொழிலாளர்களை அனுப்ப, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி, ஒரு நபருக்கு, 795 ரூபாய் வீதம், 12 லட்சத்து, 84 ஆயிரத்து, 720 ரூபாயை, தமிழக அரசு பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து, தென்மேற்கு ரயில்வேக்கு செலுத்தியது. இதனால், ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் செல்ல, நேற்று மாலை சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஓசூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு, 1,616 தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு, தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பின், வரிசையாக ரயிலில் ஏற்றப்பட்டனர். மாவட்ட கலெக்டர் பிரபாகர், ஓசூர் ஆர்.டி.ஓ., குமரேசன், மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியன், தர்மபுரி ரயில்வே கோட்ட பொறியாளர் ராம்மோகன்ராவ் மற்றும் அதிகாரிகள் குழுவினர், தொழிலாளர்களுக்கு பிஸ்கட், சப்பாத்தி, புளிசாதம், குஸ்கா மற்றும் பழவகைகள், குடிநீர் பாட்டில் ஆகியவற்றை வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X