பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை: ராயக்கோட்டையில் வீடு மேற்கூரைகள் சேதம்

Added : மே 24, 2020
Share
Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்த நிலையில், ராயக்கோட்டையில் அதிகபட்சமாக, 23 மி.மீ., மழை பதிவானது. பலத்த காற்றால் ராயக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில், வீட்டின் மேற்கூரைகள் மற்றும் மின்கம்பங்கள் சேதமாகின.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 17ல் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மாவட்டம் முழுவதும், 109.80 மி.மீ., மழை பெய்ததாகவும், அதிகபட்சமாக, அஞ்செட்டியில், 24.40 மி.மீ., மழை பதிவாகி இருந்ததாகவும், மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த, 21ல் மாவட்டத்தில் ஆங்காங்கு பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக ஓசூரில், 19 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மாலை, மாவட்டத்தில் ஆங்காங்கு பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதில், பாரூர், 16, தேன்கனிக்கோட்டை, 4, ஓசூர், 2, கிருஷ்ணகிரி, 2.20, அஞ்செட்டி, 7.40, தளி, 10, பெனுகொண்டாபுரம், 10.40, நெடுங்கல், 1.20, ராயக்கோட்டை, 23, போச்சம்பள்ளி, 8.60 என, மாவட்டம் முழுவதும், 84.80 மீ.மீ., மழை பதிவானது. அதிகபட்சமாக, ராயக்கோட்டை பகுதியில், 23 மீ.மீ., மழை பெய்திருப்பதாக, மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் அளிக்கப்பட்டது. ராயக்கோட்டை அருகே உள்ள எடவனஹள்ளி, பாறையூர், தொட்டதிம்மனஹள்ளி, முத்தம்பட்டி ஆகிய பகுதியில், நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், வீட்டின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சேதமாகின. முத்தம்பட்டி பிரதான சாலை அருகே இருந்த மின்கம்பம் உடைந்து, சாலையின் குறுக்கே மின்கம்பி அறுந்து விழுந்தது. அப்போது சாலையில் வாகன போக்குவரத்து இல்லாததால், பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X