பொது செய்தி

தமிழ்நாடு

பெண் பலியான வழக்கை சரியாக கையாளாத இன்ஸ்., இடமாற்றம்

Added : மே 24, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூரில் பெண் பலியான வழக்கை, சரியாக கையாளாத இன்ஸ்பெக்டர், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். டி.எஸ்.பி.,யிடம் விசாரணை நடக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மூக்கண்டப்பள்ளி தேசிங்கு நகரை சேர்ந்த முருகன் மனைவி வள்ளி, 24; கடந்த, 2019 செப்.,28ல் வீட்டெதிரே காம்பவுண்ட் சுவரில் சென்ற, மின் ஒயரை தொட்டபோது மின்சாரம் தாக்கி பலியானார். சிப்காட் போலீசார் விசாரணையில், வீட்டருகே வசிக்கும் மின் வாரிய ஒயர்மேன் மரியதாஸ், 45, வீட்டுக்கு சென்ற ஒயர்தான் வள்ளி உயிரிழக்க காரணம் என தெரிந்தது. விசாரணைக்காக சிப்காட் போலீசார், மரியதாஸை அழைத்து சென்றனர். ஆனால், கைது செய்யாமலிருக்க, டி.எஸ்.பி., சங்குவுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்க, போலீசார் அல்லாத நபர்கள் மூலம் பேரம் பேசி விடுவித்துள்ளனர். ஆனால், சொன்னபடி பணம் தராததால், மரியதாஸை நேற்று முன்தினம் கைது செய்தனர். இதுகுறித்து மரியதாஸ் குடும்பத்தினர் தந்த புகாரின்படி, எஸ்.பி., பண்டி கங்காதர் விசாரித்தார். இதில் புகாரின் உண்மை தன்மை உறுதியானது. இதை தொடர்ந்து வழக்கை சரியாக கையாளாத சிப்காட் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். டி.எஸ்.பி., சங்குவிடமும் விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X