பொது செய்தி

தமிழ்நாடு

17 தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: சென்னை கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 17 தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், சென்னை கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகளை, இயக்க அனுமதிக்க வேண்டும், தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினரது கோரிக்கை அடிப்படையில், சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள்(
தொழிற்பேட்டைகள், தமிழகஅரசு, சென்னை, கிண்டி, அம்பத்தூர், தொழிலாளர்கள், கிருமிநாசினி, அனுமதி, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, industrial estates, Chennai, reopen, tamil nadu, tn govt

சென்னை: சென்னை கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 17 தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், சென்னை கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகளை, இயக்க அனுமதிக்க வேண்டும், தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினரது கோரிக்கை அடிப்படையில், சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள்( நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லைக்குட்படாத தொழிற்பேட்டைகள்) 25.5.2020 முதல் அத்தொழிற்பேட்டை பகுதிகளிலேயே உள்ள 25 சதவீத தொழிலாளர்களுடன் செயல்படலாம். தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து பணிக்கு வரும் தொழிற்சாலைகளுக்கு அனுமதிக்கக்கூடாது.


latest tamil news
நிபந்தனைகள்

* தொழிலாளர்களுக்கு தினமும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும்
* பணியாளர்கள் அனைவரும் மாஸ்க், கையுறை அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
* சமூக இடைவெளி கடைபிடித்து தொழிலாளர்கள் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
* தினமும் காலை மற்றும் மாலையில் தொழிற்சாலையை கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும்.
* தொழிற்சாலையில் உள்ள கழிப்பறையை தினமும் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதை உறுதி செய்ய வேண்டு்ம
* 55 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்
* தொழிலாளர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும்.
* சோப்பு மற்றும் கிருமி நாசினி பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவும் நடைமுறையை பின்பற்றவும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தவும், போதுமான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
* இது தவிர, பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்கவும், அரசால் தனியாக வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SANKARAN NAGARAJAN - erode,இந்தியா
24-மே-202017:35:07 IST Report Abuse
SANKARAN NAGARAJAN எதற்குமே சரியான ஆலோசனை இல்லாமல் அனுமதி கொடுத்துவிட்டு ,எதிர்ப்பு வந்தவுடன் வேறு புதிய அனுமதி கொடுப்பது .போக்குவரத்துக்கு ரயில் ,பஸ் ,ஆட்டோ எதுவும் இல்லை ,வேலைக்கு எப்படி வருவார்கள் ?? இதற்கு யார் அனுமதி தருவது ??
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-மே-202012:12:37 IST Report Abuse
Lion Drsekar கர்மவீரர் காலத்தில் தொடங்கப்பட்ட இது ஒன்றுதான் இன்னமும் செயல்படுகிறது, இங்கு பணிபுரிபவர்கள் அனைவரும் அந்த மகானை என்றைக்குமே மறக்கக்கூடாது, வந்தே மாதரம்
Rate this:
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
24-மே-202015:35:48 IST Report Abuse
Loganathan KuttuvaFormer President Venkatraman was Minister for Industries in Kamarajar period. He ed amny industrial estates in important cities in Tamil Nadu....
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
24-மே-202012:09:53 IST Report Abuse
RajanRajan தொழிலார்களை எல்லாம் அவிங்க சொந்த ஊருக்கு அனுப்பீடாங்க. இந்த தொழிற்பேட்டைகள் இயங்க இங்கே இருக்கிறது நம்மூரு டாஸ்மாக் வீரர்கள் தான். எப்படி தேற போகுதோ தொழில்கள். அரசு தொழிலாளர்களை புலம் பெயரவிடாமல் பாதுகாத்திருக்க வேண்டும். தவறி விட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X