பொது செய்தி

தமிழ்நாடு

மாணவனின் சொந்த ஊரில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு: பள்ளி கல்வித்துறைக்கு யோசனை

Added : மே 24, 2020
Share
Advertisement
ஈரோடு: தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வை மாணவர்களின் சொந்த ஊர்களில் எழுத, பள்ளி கல்வித்துறை அனுமதிக்க வேண்டும் என, கல்வியாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு, ஜூன், 15ல் தொடங்குகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தற்காலிகமாக தேர்வை ஒத்தி வைக்க, பல்வேறு கட்சியினர், கல்வியாளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் வெளி

ஈரோடு: தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வை மாணவர்களின் சொந்த ஊர்களில் எழுத, பள்ளி கல்வித்துறை அனுமதிக்க வேண்டும் என, கல்வியாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு, ஜூன், 15ல் தொடங்குகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தற்காலிகமாக தேர்வை ஒத்தி வைக்க, பல்வேறு கட்சியினர், கல்வியாளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் வெளி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள், தேர்வு எழுத வருவதில் அதிக சிக்கல் உள்ளது. எனவே மாணவர்களின் சொந்த ஊரில் உள்ள, தேர்வு மையங்களில் எழுத, பள்ளி கல்வித்துறை அனுமதிக்க வேண்டும், என கோரிக்கை வலுக்கிறது.

இதுகுறித்து மத்திய அரசின் குழந்தை தொழிலாளர் நலப்பள்ளிகளை நடத்தும் கல்வியாளர் நடராஜ் கூறியதாவது: எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வை, மாணவர்களின் நலன் கருதியே, ஒத்திவைக்க வலியுறுத்துகிறோம். ஆனால், அரசு கண்டு கொள்ளவில்லை. சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூலை மாதம் தேர்வு நடக்கவுள்ளது. விடுதிகளில் படித்த மாணவர்கள், தற்போது சொந்த ஊர்களில் இருந்தால், அங்குள்ள மையங்களில், தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்று சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. இதேமுறையை தமிழக பள்ளி கல்வித்துறை பின்பற்றினால், மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கட்டமைப்பு வசதி குறைவாக உள்ள சி.பி.எஸ்.இ., நிர்வாகமே இதை செய்யும் நிலையில், அனைத்து கட்டமைப்புகளையும் கொண்ட, பள்ளி கல்வித்துறை எளிதில் இதை செயல்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X