கரூர்: கரூர் கலெக்டரை, செந்தில்பாலாஜி மிரட்டியது தொடர்பான வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, தி.மு.க.,- எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி, 45; மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராகவும் உள்ளார். கடந்த, 12ல் கரூர் கலெக்டர் அன்பழகனை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்தார். பின், நிருபர்களிடம் பேசும்போது, 'கலெக்டரை படித்த முட்டாள் எனவும், இனிமேல் ஆய்வு கூட்டத்துக்கு எங்களை அழைக்கமால் இருந்தால், கலெக்டர் வெளியே நடமாட முடியாது' எனவும் தெரிவித்தார். இதுகுறித்து தான்தோன்றிமலை போலீசில், கலெக்டர் புகார் செய்தார். இதன்படி செந்தில் பாலாஜி உள்பட, 25 பேர் மீது, ஆறு பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE