பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கில் மதுகடத்தி விற்ற டாஸ்மாக் ஊழியர்; வட்டியுடன் அபராதம் கட்ட நிர்வாகம் உத்தரவு

Added : மே 24, 2020
Share
Advertisement

கரூர்: ஊரடங்கில் மது கடத்தியும், திருடியும் விற்ற பணியாளர்கள், அபராத தொகை, வட்டி மற்றும் ஜி.எஸ்.டி.,யுடன் செலுத்த, டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால், டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன. ஆனாலும், மாநிலம் முழுவதும் மது விற்பனை களை கட்டியது. சில மாவட்டங்களில், டாஸ்மாக் கடைகளில், மது பாட்டில் திருட்டு போனது. இதனால் மது பாட்டில்களை, பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் மாற்றினர். கடந்த, 7ல் மதுக்கடைகள் திறக்கப்பட்டபோது, பல கடைகளில் இருப்பு குறைந்தது தெரிய வந்தது. பணியாளர்களே மது பானங்களை கடத்தியும், திருடியும் விற்றதை, டாஸ்மாக் நிர்வாகம் கண்டுபிடித்தது. இதையடுத்து திருட்டுத்தனமாக விற்ற மதுபாட்டில்களுக்கு கட்ட வேண்டிய தொகை, 50 சதவீத அபராதம், 24 சதவீத வட்டி மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி.,யுடன் சேர்த்து, நாளைக்குள் (மே, 25) செலுத்த, மாநில டாஸ்மாக் நிர்வாகம், மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கடை ஊழியர்களிடம், தொகையை கட்டுமாறு, மேலாளர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

கரூருக்கு ரூ.1 கோடி? கரூர் மாவட்டத்தில், 95 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. ஊரடங்கு காலத்தில், மது திருடி விற்றதாக, ஐந்து ஊழியரை போலீசார் கைது செய்தனர். தற்போது திருட்டுத்தனமாக மது விற்றது தொடர்பாக, மாவட்ட ஊழியர்கள், ஒரு கோடி ரூபாய் வரை அபராதம், வட்டி மற்றும் ஜி.எஸ்.டி., கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X