கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, வன்கொடுமை செய்ததாக முதல் மனைவி போலீசில் புகார் செய்ததால், கணவர் மற்றும் மாமனாரை, போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள கக்கன்புரத்தை சேர்ந்தவர் இளவரசி, 28. குருபரப்பள்ளியை சேர்ந்தவர் ஏ.டி.எம்., மெக்கானிக் ஹரிகேசவன், 27; இருவேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் கடந்த, 2017 டிச.,13ல், காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், கடந்த, 8ல், ஹரிகேசவன் தன் தந்தை வெங்கடேசன், 70, தாய் லட்சுமி, 65, ஆகியோர் உதவியுடன், அவரது சமூகத்தை சேர்ந்த துர்கா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதை, ஹரிகேசவனிடம் முதல் மனைவி இளவரசி தட்டிக்கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த அவர் தன் பெற்றோருடன் சேர்ந்து, இளவரசியை ஜாதி பெயரை கூறி திட்டி அவமானப்படுத்தியதுடன், மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில், நேற்று முன்தினம் மாலை இளவரசி புகார் செய்தார். எஸ்.சி.,- எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இளவரசியின் கணவர் ஹரிகேசவன், அவரது மாமனார் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். மாமியார் லட்சுமியை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE